Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆசிரியர்கள் போராட்டம்….புதுகையில் 300 பள்ளிகள் இன்று முடங்கின

புதுக்கோட்டையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்புதமிழ்நாடு
தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின்கூட்டுநடவடிக்கைகுழுசார்பில்(டிட்டோஜேக்) புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஜோதிமணி தலைமையில்  ஆா்ப்பாட்டம் நடந்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் ,பழைய ஓய்வூதிய திட்டத்தை
நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலைநிறுத்தப்போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்மாநிலபொதுச்செயலாளர் நா.
சண்முகநாதன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலதலைவர் ஜி.கே.மனோகரன்ஆகியோர்பங்கேற்று போராட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினர்.

ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் 300க்கு மேற்பட்ட பள்ளிகள் இயங்கவில்லை எனவும்,500க்குமேற்பட்டபள்ளிகளில் குறைந்த அளவிலான ஆசிரியர் களேபணிக்குவந்திருந்தனர் எனவும் போராட்டத்தில்பங்கேற்ற ஆசிரியர் கள் தரப்பில் கூறப்பட்டது.
மாவட்டம் முழுவதிலும் இருந்து டிட்டோஜேக் அமைப்பின் ஆசிரியர்கள்  அதிக
அளவில் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!