Skip to content

புதுகையில் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி, கலெக்டர் தொடங்கி வைத்தார்

மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி  ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
ஆட்சியர் மு.அருணா தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதி  ஏற்றுக்கொண்டனர் .
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன்,
ஆட்சியரின் நேர்முக உதவியாளர்( பொது) முருகேசன் , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் அருணா, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  விழிப்புணர்வு பேரணி யினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக  அங்கு மகாத்மா காந்தி படத்திற்க கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இந்த நிகழ்ச்சியில்  மருத்துவக்கல்லூரி முதல்வர்  டாக்டர் .எஸ்.கலைவாணி, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) .சா.பிரியாதேன்மொழி மற்றும்  டாக்டர்கள் பங்கேற்றனர்.

தமிழ் நாடு அரசு போக்குவரத்துக்கழக புதுக்கோட்டை மண்டல  அலுவலக  தியாகிகள் தினத்தை யொட்டி 2நிமிடம் மெளனம் அஞ்சலியும், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பும்  நடந்தது.  பொது மேலாளர் கே.முகமது நாசர்  தலைமையில் உறுதி மொழி  எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில்   துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள், அலுவலர்கள் ,தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!