புதுக்கோட்டை அருகே வடுகன்பட்டி பகுதியில் 50 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட பூசணி, பரங்கிக்காய் பயிர்கள் நீர்வரத்து இல்லாமை, வறட்சி மற்றும் மஞ்சள் நோய் தாக்குதலால் முற்றிலும் அழிந்தன. ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்தும் பயிர்களை காப்பாற்ற முடியாமல், மாடுகளுக்கு தீவனமாக மாற்றியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
