Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பஞ்சாப்: ஒரே நேரத்தில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ள 16 முன்னணி பள்ளிகளுக்கு இன்று காலை மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகங்கள் உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் அவசர அவசரமாகப் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தகவலறிந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் படையினர், மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் தீவிரச் சோதனை மேற்கொண்டனர். நீண்ட நேரச் சோதனைக்குப் பிறகு, அந்த மிரட்டல் வெறும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது. இந்தச் செயலால் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பதற்றம் நிலவியது. மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபரை சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!