மத்திய பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் அரசு மேனிலை பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு மாநில வாரிய தேர்வு நடந்தது. அப்போது தேர்வு கண்காணிப்பாளரான ஆசிரியை ராஜ்குமாரி சோனி என்பவர் 10-ம்வகுப்பு ஆங்கில வினாத்தாளை புகைப்படம் எடுத்து அதனை மற்றொரு நபருக்கு வாட்ஸ்அப்பில் பகிர்ந்து உள்ளார்.
இதனால், அதற்கான விடையை பெற முயன்றிருக்கிறார். அவர், தேர்வு அறையில் தேர்வு எழுதுபவர்களுக்கு பதிலை பகிர அவர் முயன்றுள்ளார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை தொடர்ந்து ஆசிரியை சோனி, அலட்சியத்துடன் செயல்பட்ட குற்றச்சாட்டின் கீழ் தேர்வு மைய கண்காணிப்பாளர் ஜிதேந்திர குமார் குல்கர்னி, உதவி கண்காணிப்பாளர் அனிதா தீட்சித் ஆகிய 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
எனினும், வினாத்தாள் கசியவில்லை என்றும் காலை 9.06 மணிக்கு புகைப்படம் வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டது என்றும் 109 மாணவர்கள் காலை 8.40 மணிக்கே தேர்வு மையத்திற்குள் வந்து விட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனால் விதிமீறியதற்காக சோனிக்கு எதிராக சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சோனிக்கு எதிராக புதிய குற்றவியல் சட்டத்தின்படி போலீசில் புகார் ஒன்றும் பதிவாகி உள்ளது.