Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி- தொடக்கம்

திருச்சியில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி- தொடக்கம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கான ரேபிஸ் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2024 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி 43 ஆயிரம் சமூக நாய்கள் (தெரு நாய்கள்) இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டு, இதுவரை 30 ஆயிரம் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு ரேபிஸ்

வெறி நாய் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது

இதனிடையே ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்ட 30 ஆயிரம் நாய்களுக்கு தற்போது மீண்டும் பூஸ்டர் போஸ் எனப்படும் கூடுதல் தடுப்பூசி இன்றைய தினம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் தன்னார்வ அமைப்பு சார்பில் இலவச ரேபிஸ் தடுப்பூசி போடும் முகாம் திருச்சி கிஆபெ அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது

தலைமை கால்நடை மருத்துவர் தனபால் தலைமையில் மாநகராட்சி நாய்கள் பிடிக்கும் ஊழியர்களைக் கொண்டு பிடித்துவரப்பட்ட தெரு நாய்களுக்கு, ஆறு கால்நடை மருத்துவர்களைக் கொண்டு, தன்னார்வலர்கள் உதவியுடன் ரேபிஸ் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக கருத்தடை செய்யப்பட்ட சமூகநாய்கள் கண்டறியப்பட்டு அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரி வளாகங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களை தேர்வுசெய்து அங்கு சுற்றிதிரியும் சமூக நாய்களை பிடித்து பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும், நாளொன்றுக்கு 200 நாய்கள் வீதம் முதற்கட்டமாக முப்பது நாளில் 6000 நாய்களுக்கும் அதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக எஞ்சிய நாய்களுக்கு தடுப்பூசி போட உள்ளதாகவும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்

error: Content is protected !!