Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலையில் ராகுல்காந்திக்கு ஆயுர்வேத சிகிச்சை..

கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டியின் இறுதிச்சடங்கு கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி புனித ஜார்ஜ் ஆர்ததோடக்ஸ் தேவாலயத்தில் நடந்தது. அதில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அவர் கேரளாவில் தங்கியிருந்து ஆயுர் வேத சிகிச்சை பெற அவர் ஏற்கனவே முடிவு செய்திருந்தார். அதன்படி கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சைக்கு பிரசித்தி பெற்ற கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலையில் தங்கியிருந்து அவர் ஆயுர்வேத சிகிச்சை பெறுகிறார். அந்த வைத்திய சாலையின் தலைமை மருத்துவ நிபுணர் மாதவன்குட்டி வாரியரன் மேற்பார்வையில் ராகுல் காந்திக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உம்மன்சாண்டியின் இறுதிசடங்கில் பங்கேற்று விட்டு, நேற்று இரவிலேயே அவர் கேட்டக்கல் ஆரிய வைத்திய சாலைக்கு சென்றார். அங்கு அவருக்கு இன்று முதல் சிசிச்சை அளிக்கப்படுகிறது. வருகிற 29-ந்தேதி வரை ராகுல்காந்தி அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!