Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2 ஆண்டு சிறை… ராகுல் அப்பீல் மனு…. வரும்29ம் தேதி விசாரணை

 

கடந்த மக்களவை தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலாரில் பேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மோடி  சமூகம் பற்றி அவதூறாக பேசியதாக  குஜராத் மாநிலம் சூரத்  கோர்ட்டில் பாஜக முன்னாள் அமைச்சர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் கோர்ட்  ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.  டில்லியில் எம்பிக்களுக்கு ஒதுக்கப்பட்ட அவரது வீட்டையும் மத்திய அரசு காலி செய்தது.

இந்த நிலையில் சூரத் கோர்ட் விதித்த தண்டனையை எதிர்த்து ராகுல் குஜராத் மாநில ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார், இந்த அப்பீல் மனு  வரும் 29ம் தேதி  விசாரணைக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!