Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மழை….. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய மாவட்டத்தில் தற்போது வரை 85 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை பல்வேறு இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்தது. தமிழகத்தில் அதிகபட்சமாக மாவட்டத்தில் சீர்காழியில் 19 மில்லி மீட்டர், செம்பனார்கோவிலில் 15.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் மயிலாடுதுறையில் 8.60 மி.மீ மழை பதிவாகி இருக்கிறது. இந்த மழையின் காரணமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யும் இடங்களில் தண்ணீர் இருப்பதால் தற்காலிகமாக பல்வேறு பகுதிகளில் கொள்முதல் பணி நிறுத்தப்பட்டுள்ளது. நல்லத்குடி,கோடங்குடி ஆனந்ததாண்டவபுரம், சேத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். சம்பா சாகுபடி தொடங்கும் காலத்தில் மழை பெய்ததால் விளைச்சல் பாதித்து தற்போது அறுவடை நேரத்திலும் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!