நவம்பர் 13ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 18 மாவட்டத்தில் மழை பெய்யும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலியின் கடலோரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ஈரோடு, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் ஒரு சில இடங்களிலும், காரைக்காலிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் 18 மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு
