Skip to content
Home » ராமர் சிலை மீது ஏறிய பாஜ., எம்.எல்.ஏ….கிளம்பிய புது சர்ச்சை….

ராமர் சிலை மீது ஏறிய பாஜ., எம்.எல்.ஏ….கிளம்பிய புது சர்ச்சை….

  • by Senthil

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் பசவ கல்யாண் சட்டமன்ற தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரணு  சால்கர் நேற்று ராம நவமி பண்டிகையை முன்னிட்டு தனது ஆதரவாளர்களுடன் சுமார் 12 அடி உயரம் கொண்ட ராமர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றார். அப்போது சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் ராமர் சிலையின் மீது மாலை அணிவிக்க ஏணியை எடுத்து வர தவறிவிட்டனர். இதனால் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராமர் சிலையின் மீது வெறும் காலில் ஏறி ராமர் தொடை மீது நின்று கொண்டு சிலைக்கு மாலை அணிவித்தார். ராமர் தொடை மீது நின்று கொண்டு ராமர் சிலையை கட்டிப்பிடித்தவாறு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் பின்பு கீழே இறங்கி ராமருக்கு கற்பூர ஆரத்தி காட்டி பூஜை செய்துவிட்டு தனது ஆதரவாளர்களுடன் நடனமாடினார்.

Image

இந்த காட்சிகளை காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இதுதான் ராமருக்கு பாஜக அளிக்கும் மரியாதையா என கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. ராமரை பாஜக சட்டமன்ற உறுப்பினர் அவமதிக்கும் வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து விமர்சனம் செய்து வரும் நிலையில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!