Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரம்ஜான் பண்டிகை….நாகையில் புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் கொண்டாட்டம்…..

ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களில் இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள்

பங்கேற்று மனமுருகி தொழுகையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து புத்தாடை அணிந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிய இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர். இதேபோல நாகை மாவட்டத்தில் உள்ள 50 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களிலும், ரமலான் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!