Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எடை குறைவு பிரச்னை இனி இல்லை..பாக்கெட்டுகளில் ரேஷன் பொருட்கள்…

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் சாமானிய மக்களுக்கு குறிப்பிட்ட ரேஷன் கார்டுகள் பொறுத்து அரிசி (இலவசமாக), சர்க்கரை, துவரம் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ரேஷன் பொருட்கள் ஒருசில இடங்களில் சுகாதாரமில்லாமல், எடை குறைவாக விநியோகிக்கபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துகொண்டு இருக்கின்றன. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசு தற்போது புதிய முயற்சியை கையாண்டுள்ளது.

அதன்படி, ரேஷன் பொருட்களை எடைபோட்டு அதனை பாக்கெட்டுகளில் அடைத்து விநியோகம் செய்ய முடிவு செய்து தற்போது சோதனை முயற்சியாக 234 தொகுதிகளில் தலா 1 ரேஷன் கடையில் இதனை செயல்படுத்திட திட்டமிட்டுள்ளது. அதன்படி, இன்று சேலத்தில் குறிப்பிட்ட ஒரே ஒரு ரேஷன் கடையில் சோதனை முயற்சியாக செயல்படுத்தி தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!