Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரயில் விபத்து.. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செய்த இளைஞர் காங்., கட்சியினர்..

தமிழ்நாட்டையே உழுக்கிய ஒடிசா பாலசோர் ரயில் விபத்து – திருச்சி தெப்பக்குளத்தில் உயிரிழந்த நபர்களுக்கு
மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியினர்.  ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும்,ஒரு சரக்கு ரயிலும் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த கொரமண்டல் எக்ஸ்பிரசில் தமிழகத்தை சேர்ந்த பயணிகளும் பயணித்து வந்த நிலையில் இதுவரை எத்தனை பேர் உயிரிழந்தனர் எவ்வளவு பேருக்கு காயம் என்கிற

முழுமையான விவரங்கள் வெளி வரவில்லை.

இந்நிலையில் இந்த கோர விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பாக திருச்சி தெப்பக்குளத்தில் உள்ள காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் மாநில தலைவர் லெனின் பிரசாத் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விபத்து தொடர்பான புகைப்படங்களை கைகளில் ஏந்தியபடி, மெழுகுவர்த்தி ஏந்தி விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!