Skip to content

செங்கோட்டையன் ஒரு செல்லாக் காசு- செல்லூர் ராஜூ

மதுரை பைக்காரா பகுதியில் புதிய நியாய விலைக்கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு முல்லை பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டம் முழுமையாக மக்களுக்கு வந்து சேரும். முதல்வர் திறந்து வைத்த பிறகு கூட இதுவரைக்கும் 30 சதவீத வாடுகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. முறையாக வழங்கப்படவில்லை. திட்டம் தொடங்கியும் மக்களுக்கு பயனில்லாமல் உள்ளது.முதலமைச்சருக்கு பயம் வந்துவிட்டது. பாஜக- அதிமுக ஆதரவு பெருகிக்கொண்டே இருப்பதை அவரால் சகிக்க முடியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. திமுக அரசாங்கத்தை விட பல் மடங்கு சிறந்த நிர்வாகி எடப்பாடி பழனிச்சாமி. கருத்துக்கணிப்பை பார்க்கும்போது முதலமைச்சருக்கு பயம் வந்துவிட்டது. முதல்வர் திமுக தோழமைக் கட்சிகளை அடிமையாக வைத்திருக்கிறார்.

திமுக கூட்டணி வைத்தால் நட்பு ரீதியில் நாங்கள் கூட்டணி வைத்தால் அடிமை ரீதியாகவா..? அவர்கள் கூட்டணிக்குள் கொள்கை முரண்பாடு உள்ளது. இதையெல்லாம் பார்க்கும் போது பதட்டம் வந்துவிட்டது முதல்வருக்கு. பட்ஜெட்டை கனிமொழி விமர்சனம் பண்ற அளவிற்கு ஒன்றும் இல்லை. அவர் சிறந்த நிர்வாகி தான். பல வணிகர்கள் இதை வரவேற்று இருக்கிறார்கள். பட்ஜெட் வெளியிட்டுள்ளது முன்னோட்டம் தான், செயல் வடிவில் வரும்போது இன்னும் பல திட்டங்கள் வர உள்ளது. பட்ஜெட் சிலருக்கு கசக்கும், சிலருக்கு புளிக்கும், சிலருக்கு இனிக்கும். ஒன்பதாவது முறையாக பெண் பட்ஜெட்டை சமர்ப்பிப்பது தமிழ்நாட்டிற்கு பெருமை. கைத்தறி ஆடையை உடுத்தி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். மெட்ரோ ரயில் தமிழக அரசு முறையாக வடிவமைக்க வேண்டும். மத்திய அரசு கொடுப்பார்கள். பயன்பாடுகள் குறித்து விளக்கமாக கொடுக்கவில்லை. அதற்காக அனுப்பப்பட்டதை மத்திய அரசு புறக்கணிப்பு என கூறுகிறார்கள்.

செங்கோட்டையன் செல்லாக்காசு. யாருமே ஏற்றுக் கொள்ளாததால் தவெகவிற்கு சென்றுள்ளார். போனவங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டுமா.? தூத்துக்குடி துப்பாக்கிச்சூடும்போது செங்கோட்டையன் எங்களுடன் தான் இருந்தார். அப்போது எங்கு சென்றார் மாங்கா பறிக்க சென்றாரா.? எங்கள் ஆட்சிக் காலத்தில் 17 மருத்துவ கல்லூரி கொண்டு வந்தோம். எய்ம்ஸ் முதல் கட்டிடம் திறக்கப்பட உள்ளது. மது போதையில் தமிழ்நாட்டில்தான் மைய புள்ளியாக உள்ளது என அமெரிக்கா உளவுத்துறை சொல்லி உள்ளது. விஜய் செய்தியாளரை சந்தித்தால் அதுவே பெரிய சாதனை. இங்கிருந்து சென்ற செல்லாக்காசுகளை கூறச் சொல்லுங்கள் செய்தியாளர்கள் சந்திக்க சொல்லுமாறு” என கூறினார்.

error: Content is protected !!