Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி கலெக்டர் முகாம் அலுவலகத்தில் ரீல்ஸ்… அதிர்ச்சி

திருச்சி கலெக்டர் முகாம் அலுவலகத்தில் ரீல்ஸ்... அதிர்ச்சி

திருச்சி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியரின் அறையில் இளைஞர் ஒருவர் ரீல்ஸ் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

த.வெ.க அரசு பொறுப்பேற்றது முதல் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் என பலர் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்த ஆட்சியை ரீல்ஸ் ஆட்சி என விமர்சிக்கும் அளவிற்கு அவருடைய செயல்பாடு உள்ளது.

இந்த நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் அதுவும் ஆட்சியர் அறைக்குள்ளே இளைஞர் ஒருவர் ரீல்ஸ் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி ஆட்சியர் பிரத்திக் தயாள் முகாம் அலுவலகத்தில் கட்டடப் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்ட வடமாநில பணியாளர் ஒருவர் தவறுதலாக முகாம் அலுவலக அறையில் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.. இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, மேற்படி நபர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என – திருச்சி ஆட்சியர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

error: Content is protected !!