திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் பகுதியை சேர்ந்த குமரன் (21) என்ற வாலிபர். Stylish_ racer_108 என்கிற இன்ஸ்டாகிராம் பேஜ் ஓபன் பண்ணி அதில் அதில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் கவரில் பெட்ரோல் நிரப்பி அதன் மீது பவுடரை கொட்டி வெடி மருந்து வைத்து வெடிக்கச் செய்கிறார்.
அது பெரிய குண்டு போல வெடிக்கிறது. அதன் வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்இ அதேபோல மாரி படத்தில் வரும் டயலாகான நம்மளால அவனை தொடக் கூட முடியாது சார் .இந்த ஏரியாவுல அவன் தான் பெரிய கை என்று போலீசார் கூறுவார்கள்.
அதுபோல ஜோலார்பேட்டை காவல் நிலையம் முன்பு ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். அதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. இதுபோல வன்முறையை ஏற்படுத்தும் வகையிலும் பொது மக்களை அச்சுறுத்தும் வகையிலும் பதிவேற்றம் செய்யும் வாலிபர்கள் மீது போலீசார் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

