திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2027 ஜனவரி மாதத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான ஆர்ஜித சேவை, சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் மற்றும் தங்குமிட ஒதுக்கீடு விவரங்களை தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடவுள்ளது. அதன்படி, இன்று காலை ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளுக்கான குலுக்கல் பதிவு தொடங்குவதுடன், வரும் நாட்களில் அங்கப்பிரதட்சணம், மூத்த குடிமக்களுக்கான தரிசன டிக்கெட்டுகள் மற்றும் ரூ.300 கட்டண சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் வரிசையாக வெளியிடப்பட உள்ளன. மேலும் விபரங்களுக்கு: https://ttdevasthanams.ap.gov.in
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாத தரிசன டிக்கெட் வெளியீடு
