லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், பிரபல யூடியூபர் பாரத் கதாநாயகனாக நடித்துள்ள ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிரஞ்சன் இயக்கியுள்ள இப்படத்தில் ‘கட்சி சேர’ பாடல் மூலம் பிரபலமான சம்யுக்தா விஸ்வநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். அக்டோபர் 1-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதே நாளில் பல முக்கிய திரைப்படங்கள் வெளியாக உள்ளதால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் தயாரித்த ‘மிஸ்டர் பாரத்’ ரிலீஸ் ஒத்திவைப்பு
