Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறப்பு – ஈரான் அதிரடி அறிவிப்பு

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதோடு, ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது.

இதனால் சவுதி அரேபியா, கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஈராக் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனிடையே ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கு ஈரானுக்கு கெடு விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் ஈரான் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்தார். ஆனால் அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு ஈரான் அடிபணியாத நிலையில், காலக்கெடு முடிவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, “இன்று ஒரு முழு நாகரீகம் அழியப்போகிறது” என்று அதிபர் டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்தார்.
இதையடுத்து இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிட்டு ஈரான் – அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து போர் 2 வாரங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்தார். போர்நிறுத்த காலத்தில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தாது என்று டிரம்ப் தெரிவித்தார்.
அதே சமயம், லெபனான் மீதான தாக்குதலும் நிறுத்தப்பட வேண்டும் என ஈரான் வலியுறுத்தியது. இதனை ஏற்று லெபனான் இஸ்ரேல் இடையிலான் போர் 10 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார்.

இந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராக்சி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “லெபனானில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்திற்கு இணங்க, ஈரான் இஸ்லாமியக் குடியரசின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வழித்தடத்தில், போர் நிறுத்தம் நீடிக்கும் காலம் முடியும் வரை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனைத்து வர்த்தக கப்பல்களின் பயணமும் முழுமையாகத் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!