30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு பரோல் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், அதற்கு தடையாக உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலாளரை மாற்ற வேண்டும் என பனஉள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் இன்று திருச்சி பாலக்கரையில் இருந்து மத்திய சிறை வரை பேரணியாக சென்று திருச்சி மத்திய சிறையை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருச்சி பாலக்கரை
ரவுண்டானாவில் இருந்து மத்திய சிறை வளாகத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினர் முன்பாகவே அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
இதனால் அப்பகுதியில் வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல வழிவகை செய்யப்பப்பட்டது,இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் செரிப் தலைமையில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் பாலக்கரை பகுதியில் திரண்டு பேரணியாக செல்ல முற்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து போராட்டக்காரர்கள் கூறும் பொழுதுதமிழக அரசின் தலைமைச் செயலாளர் பாஜகவின் ஏஜென்ட்டாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தமிழகத்தில் இணை அரசை நடத்த முயற்சிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர். எனவே அவரை அப்பொறுப்பிலிருந்து மாற்ற வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறோம் என்று கூறினர்.
