தமிழகத்தில் அரிசி விலை கடந்த 2 மாதங்களில் 3வது முறையாக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் அரிசி தேவையில் 70% மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதால், 30% வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் போதிய மழை இல்லாததால் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், கர்நாடக பொன்னி அரிசி கிலோ ரூ.55-ல் இருந்து ரூ.85 ஆகவும், இட்லி அரிசி ரூ.35-ல் இருந்து ரூ.50 ஆகவும் உயர்ந்துள்ளது. ஐஆர்20 அரிசி ரூ.40-ல் இருந்து ரூ.60 ஆகவும் உயர்ந்துள்ளது.
அரிசி விலை தொடர்ந்து 3வது முறையாக உயர்வு
