Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புகார் கொடுக்க வந்த இடத்திலேயே: எண் வாங்கிவாட்ஸ்அப்-ல் தொல்லை கொடுத்த காவலர்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் மற்றொரு வழக்கு தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண்ணின் தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்ட தலைமை காவலர் அக்னிமுத்து, புகார் அளிக்க வந்த அவரிடம் வாட்ஸ்அப் மூலம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.நேரடியாக புகார் அளித்தார்காவலர் அக்னிமுத்துவின் இந்த அத்துமீறலை தாங்க முடியாத அந்த பெண், தகுந்த ஆதாரங்களுடன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக புகார் அளித்தார்.புகாரின் பேரில் உடனடியாக முதற்கட்ட துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு, குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது என உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தலைமை காவலர் அக்னிமுத்து உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.காவல் ஆய்வாளர் திலீபன்ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான், பெண் காவலர் ஒருவருக்கு வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் காவல் ஆய்வாளர் திலீபன் என்பவர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.இந்த சம்பவம் அந்த அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!