Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“தண்ணீர் திறக்காவிட்டால் சாலை மறியல்” – அய்யாக்கண்ணு எச்சரிக்கை

“தண்ணீர் திறக்காவிட்டால் சாலை மறியல்–அய்யாக்கண்ணு எச்சரிக்கை

திருச்சி கோட்டாட்சியர் அ அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு உள்ள ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
முன்னதாக அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகளின் வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராடிய விவசாய சங்கத் தலைவர்கள் மீது, திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளைத் திரும்பப் பெறப்போவதாகத் தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
முன்னதாக, அதிமுக ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக திமுக ஆட்சிக் காலத்தில் அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால், அவர் அதனை நடைமுறைப்படுத்தவில்லை.
எனவே, தற்போதைய முதல்வர் விஜய் தன் அறிவிப்பை உண்மையாகவே நடைமுறைப்படுத்தப் போகிறாரா? இல்லையா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வழக்குகளை திரும்ப பெற்றால் அது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிப்பதாக அமையும்.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைப் பகுதிக்குச் சென்று சேர வாய்ப்பில்லை. இந்நிலையில், திருச்சியில் காவிரி கரையோரம் உள்ள வாழை, தென்னை, பனை உள்ளிட்ட மரங்கள் நீரின்றி காய்ந்து வருகின்றன. எனவே, உடனடியாக திருச்சியில் உள்ள வாய்க்கால்கள் அனைத்திலும் தண்ணீரைத் திறந்துவிட வேண்டும்.தவறினால், அடுத்தகட்டமாகப் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
தவெக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, விவசாயக் கடன்கள் அனைத்தையும் உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
பாஜக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி விவசாய விளைபொருட்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் வகையில் விலையை இரட்டிப்பாக்கி நிர்ணயம் செய்ய வேண்டும்.
விவசாயிகளின் வாழ்வாதார உரிமைகளுக்காக நடத்தப்படும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்குத் தடை விதிக்கக் கூடாது.
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளைத் மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக நிறைவேற்றவேண்டும்

இவ்வாறு அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

error: Content is protected !!