Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி சாலை மறியல்

திருச்சியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி சாலை மறியல்

திருச்சியில் டாஸ்மாக் மதுபான கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் – காவல்துறையினர் பேச்சுவார்த்தை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் வழிப்பாட்டு தலங்கள் அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவித்தார். ஆனால் பல்வேறு இடங்களில் கடைகள் மூடப்படவில்லை என தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி முடுக்குப்பட்டி சாலையில் போக்குவரத்து மிகுந்த பகுதியான வழிபாட்டுத்தலங்கள் , தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்கள் மற்றும்

பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை (கடை எண் 10230) நிரந்தரமாக மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பொன்மலை பகுதி செயலாளர் விஜயேந்திரன் தலைமையில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் சாலை மறியல் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டக்காரர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட வைத்தனர்.

ஆனால் போராட்டக்காரர்கள் தாசில்தார் உடனடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், டாஸ்மாக் கடையை இழுத்து மூடுவதற்கான உறுதிமொழி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் கோவி.வெற்றி செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், லெனின், சிஐடியு மாவட்ட துணை தலைவர் மணிமாறன், கிளைச் செயலாளர் கணேசன், நிர்வாகிகள் சித்ரா, புவனேஸ்வரி மற்றும் பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!