கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றாத திமுக அரசே கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது.
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி கூட்டமைப்பின் சார்பில், வருவாய் கிராம உதவியாளருக்கு உள்ளது போல் பென்சன் ரூ 6750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் ரூ 19,500/ சமையல் உதவியாளருக்கு அலுவலக உதவியாளர் நிலை ரூ 15,700 அடிப் படையில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியர்க்கு தேசிய மருத்துவ காப்பீடு வழங்கிட வேண்டும், ஈமச்சடங்கு நிதி

ரூபாய் 25 ஆயிரம் வழங்க வேண்டும் மேலும் தமிழக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டம் என் நடைபெற்று வரும் நிலையில் இன்றும் மாநில அளவில் கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி கூட்டமைப்பின் சார்பில் மாநிலம் தழுவிய சாலை மறியல் போரட்டம் செய்துவருகின்றனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனலட்சுமி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தனலட்சுமி தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷம் எடுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

