தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே இலுப்பக்கோரை கிராமத்தில் சுமார் 200-குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நான்கு மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையால் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்த கிராமத்துக்கு செல்லும் குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டதாகவும்..
நான்கு மாதங்களுக்கு மேலாகி இலுப்பக்கோரை கிராமத்திற்கு குடிநீர் வசதி இல்லாமல், குடிநீர் எடுப்பதற்கு நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பக்கத்து கிராமங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருவதாகவும்,
சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை குடிநீர் கேட்டு மனுக்கள் அளித்தும் எவ்வித பலனும் இல்லை என தெரிவிக்கும் கிராம மக்கள். உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவையாறு கும்பகோணம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பயணிகளும் அவதி அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறை, மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் உடனடியாக குடிநீர் அமைத்து தரப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மறியல் போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

