Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் ஐடி ஊழியரிடம் கொள்ளை- 4 பேருக்கு வலை

மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை தெற்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ் ( 38 ). இவர் பெங்களூரில் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.  இவர் பெங்களூரில் இருந்து திருச்சி வழியாக பேருந்தில் தன் சொந்த ஊருக்கு சென்றார். அப்போது இவரிடம் விஷ்வா என்ற நபர் அறிமுகம் ஆகியுள்ளார். இந்த நிலையில் சதீஷ் தன் வீட்டிலிருந்து பெங்களூர் சென்றபோது அந்த மர்ம நபர் மீண்டும் திருச்சியில் பஸ்சில் சந்தித்துள்ளார் .அப்போது அந்த மர்ம நபர் இவரிடம் தான் உடைமைகளை வீட்டில் விட்டுவிட்டு வந்ததாகவும் அதை எடுத்து வர வேண்டும் என கூறி இவரை இருசக்கர வாகனத்தில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று அவரது கூட்டாளிகள் மூன்று பேருடன் சேர்ந்து  சதீசை  ஹெல்மெட்டால் தாக்கி அவரிடம் இருந்த ரூபாய் 48 ஆயிரம் பணம் ஒரு செல்போன் மற்றும் இரண்டு பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றார். இது குறித்து கன்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார்  வழக்குப்பதிவு செய்து , தப்பி ஓடிய 4 பேர்  கும்பலை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!