ராமாபுரத்தில் போலீஸ் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறி வீட்டில் நுழைந்து வீட்டில் இருந்த பெண்கள் உட்பட மூவரை கட்டி போட்டு செல்போன் கொள்ளையடித்த வழக்கு
போலி போலீஸ் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை
சென்னை ராமாபுரம் கோத்தகிரி நகரை சேர்ந்தவர் சந்தான லட்சுமி. இவர் தனது மகள் கீர்த்தியுடன் வசித்து வருகிறார். மகள் கீர்த்தி தனியார் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 10 ஆம் தேதி மாலை தாயும் மகளும் நாய் குட்டியை வாக்கிங் அழைத்து சென்று விட்டு வீட்டிற்கு வந்தனர்.
அப்போது போலீஸ் சீருடையில் வந்த ஒருவர் தான் போலீஸ் என்றும் சாதாரண உடையில் இருந்த இருவர் நாங்கள் வருமானவரி அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தனர்.
பின்னர் அந்த கும்பல் சந்தான லட்சுமியிடம் வீட்டில் உள்ள நகை, பணம், மற்றும் நிலம் விற்று வந்த பணம் அனைத்தையும் எடுத்து கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தான லட்சுமி உடனே என்ன செய்து என்று தெரியாமல் முதல் தளத்தில் வசிக்கும் தனது சகோதரி சந்திரகலாவை தொடர்பு கொண்டு கீழே வருமாறு அழைத்ததன் பேரில் சகோதரியும் அவரது மகன் பிரகாஷும் கீழே வந்து கொள்ளை கும்பலிடம் வருமான வரித்துறை அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டனர்.
அப்போது காரில் அமர்ந்திருந்த மேலும் இவர் ஓடிவந்து பிரகாஷ், சந்தான லட்சுமி, உள்ளிட்டோரை பிடித்து கயிற்றால் கட்டி வாயில் துணியை வைத்து அடைத்தனர். பின்னர் அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி விலையுயர்ந்த மூன்று செல்போனை பறித்துக் கொண்டு காரில் தப்பி சென்றனர்.
பின்னர் கீர்த்தனா அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அனைவரையும் மீட்டு காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் தகவல் அறிந்து ராமாபுரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி சந்தான லட்சுமி அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்து சம்பவயிடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தொடர் விசாரணையில் கொள்ளை கும்பல் காரில் போலி பதிவு எண்ணை பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது.
பின்னர் போலீசார் சிசிடிவி காட்சியில் பதிவான அடையாளங்களை வைத்து கொளத்தூர் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் விஜயகுமார் (32), கும்டிபூண்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா(26), திருவள்ளுவரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் யஷ்வந்த் (21), கண்ணன் (19),அருண் ராஜ் (30) ஆகிய ஐந்து பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி பிரசாந்த் என்பவரை தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட அருண் ராஜ், ராஜா, விஜயகுமார் ஆகியோர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
