தஞ்சையில் வாகன சோதனையின் போது ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 590 ரூபாய் ரொக்கப் பணத்தை தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு படையினர் பறிமுதல் செய்தனர்.
தஞ்சை கீழவாசல் ரவுண்டான பகுதியில் ராஜ்குமார் தலைமையிலான தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த டி.என் 49 AD 9639 எண் கொண்ட ஈச்சர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது உரிய ஆவணங்கள் இல்லாமல் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 590 ரூபாய் இருப்பது தெரியவந்தது.
இதுக்குறித்து ஓட்டுனர் பால்ராஜிடம் விசாரித்த போது திருவாரூரில் இருந்து முட்டை ஏற்றி வந்து இறக்கி விட்டு பணம் வசூலித்து திரும்ப செல்வதாக கூறி உள்ளார்.
ஆனால் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் சீல் வைத்து தஞ்சை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
