கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேலம்பாடி, லிங்கமநாயக்கம்பட்டி, சாந்தப்பாடி, இனங்கனூர், சேந்தமங்கலம் மற்றும் ஆலமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.1 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சி பணிகளை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ துவக்கி வைத்தார். தொடர்ந்து ஆண்டிப்பட்டி கோட்டை அரசு

உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவ–மாணவிகளுக்கு நான்காவது முறையாக சுமார் 23 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி ஒன்றிய கழகச் செயலாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

