ரயில் பயணத்தின்போது சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சத்தமாகப் பேசுவது, செல்போனில் அதிக ஒலியுடன் பாடல்களைக் கேட்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறித் தொடர்ந்து தொந்தரவு ஏற்படுத்தினால் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
