Skip to content

டாஸ்மாக் சூப்பர்வைசரிடம் ரூ. 28 ஆயிரம் பறிப்பு- திருச்சி க்ரைம்

டாஸ்மாக் சூப்பர்வைசரிடம் ரூ. 28 ஆயிரம் பறிப்பு

திருச்சி புத்தூர் சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (55) இவர் கரூர் பைபாஸ் சாலை அருகே உள்ள டாஸ்மாக்கில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார் .இவர் நேற்று வேலையை முடித்துவிட்டு தன் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு புத்தூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மூன்று மர்ம நபர்கள் இவரை வழிமறித்து அவரிடம் இருந்த பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். அந்தப் பையில் ரூபாய் 28 ஆயிரம் பணம் இருந்தது குறிப்பிடத்தக்கது .இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

மோட்டார்கள் திருடிய வாலிபர் கைது…

கரூர் மாவட்டம் குறிச்சியை சேர்ந்தவர் அருள் (28 )இவர் திருச்சி தில்லைநகர் ஐந்தாவது குறுக்குத்தெரு பகுதியில் கட்டிடத்தில் வேலை செய்து வருகிறார். இவர் அருகே டீ குடிக்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது கட்டிடத்தில் இருந்த இரண்டு மோட்டார்கள் திருடு போனது
தெரியவந்தது. திருடு போன மோட்டர்களின் மதிப்பு ரூபாய் 10,000 என கூறப்படுகிறது. இதுகுறித்து தில்லைநகர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து திருவெறும்பூர் மலைகோ.வில் பகுதியைச் சேர்ந்த முஜிபுர் ரகுமான் (39) என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ரூபாய் 500 பணம் மீட்கப்பட்டது.

55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு..

ஸ்ரீரங்கம் வெள்ளித்திரு முத்தம் பகுதி விஏஓ பாரதிதாசன் அவரது எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து சென்றார். அப்போது ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து அவர் ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பறினர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம்
ரூ.1. 43 லட்சம் மோசடி

திருச்சி பீமநகர் பழைய தபால் அலுவலக சாலையைச் சேர்ந்தவர் முகமது சிக்கந்தர் (33) இவர் வெளிநாட்டு வேலைக்காக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அரியான் கோட்டை பகுதியைச் சேர்ந்த ராமநாதன் ( 46 ) என்பவரிடம் பல்வேறு தவணைகளில் ரூபாய் ஒரு லட்சத்து 43 ஆயிரம் கொடுத்தார். பணத்தைப் பெற்றுக் கொண்ட ராமநாதன் வேலையும் வாங்கித் தராமல் பணத்தையும் திரும்ப தராமல் வெகு நாளாக காலம் தாழ்த்தி முகமது சிக்கந்தரை ஏமாற்றி வந்தார் இது குறித்து செசன்ஸ் நீதிமன்ற குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து ராம நாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் இதுபோன்று யாரிடமாவது பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளாரா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

தள்ளுவண்டி வாங்கி தருவதாக ரூ.5 ஆயிரம் மோசடி

திருச்சி சிந்தாமணி பூசாரி தெரு பகுதியை சேர்ந்த பாத்திமா ( 37 ) அப்பகுதியில் அவர் நடத்தி வரும் சிறிய கடைக்கு தள்ளுவண்டி கேட்டு திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் தான் வேலை செய்வதாக கூறிய ஒருவர் அவரிடம் ரூ.5 ஆயிரம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியது தெரியவந்தது. தொடர்ந்து செசன்ஸ் நீதிமன்ற
போலீசார் வழக்குப்பதிந்து கரூர் மாவட்டம் பிரம்ம தீர்த்த தெருவை சேர்ந்த மணி என்கிற அருள் (45) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போதை மாத்திரைகளுடன் வாலிபர் அதிரடி கைது..

திருச்சி தில்லை நகர் அண்டகொண்டான் பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடப்பதாக தில்லைநகர் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சோதனை நடத்தி போதை மாத்திரை வைத்திருந்த தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த முகமது அலி 41 என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவரிடமிருந்து ஐந்து போதை மாத்திரைகள் தண்ணீர் பாட்டில் மற்றும் ஒரு ஊசி பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட வாலிபர் சரித்திர பதிவேடு ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது.

போலி பாஸ்போர்ட் வைத்திருந்த நபர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் தேவியடையானம் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (46). இவர் நேற்று மலேசியா செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார் அங்கு இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவர் போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து பிறந்த தேதியில் மற்றும் பிறந்த ஊர் ஆகியவற்றை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து ஏர்போர்ட் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!