சேலம் அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கதிரவன், தனது தந்தை பெயரில் உள்ள வீட்டை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். பட்டா வழங்க ரூ.5,000 லஞ்சம் கேட்ட நில அளவையர் முருகேசன் மற்றும் புரோக்கர் பூவரசன் ஆகியோரை, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டா மாற்றம் செய்ய ரூ.5,000 லஞ்சம்: நில அளவையர், புரோக்கர் கைது
