தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து தமிழ்நாடு அரசின் பொது சட்டம் ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து முன்னர் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து புதிய அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. பொது சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளிக்கப்பட்டதற்குப் பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், அந்த உத்தரவை அரசு தற்போது திரும்பப் பெற்றுள்ளது. இதன் மூலம் மீண்டும் அத்துறை குறித்த தகவல்களை ஆர்டிஐ மூலம் பெற வழிவகை ஏற்பட்டுள்ளது.
ஆர்டிஐ விலக்கு உத்தரவு ரத்து – தமிழக அரசு அரசிதழ் வெளியீடு!
