சபரிமலை ஐயப்பன் கோயில் துவாரபாலகர் சிலைக்குத் தங்க முலாம் பூசுவதற்காக வழங்கப்பட்ட தங்கத்தில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறை (ED) தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
ஏற்கனவே இந்த வழக்கு சம்பந்தமாக சென்னையில் உள்ள நடிகர் ஜெயராமின் வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, தற்போது கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சபரிமலை தொடர்பான இந்த விசாரணை தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், இதில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

