Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மழையில் செல்ல நாய் ‘பவுன்சர்’ உடன் சச்சின் ஜாலி விளையாட்டு

மழையில் செல்ல நாய் ‘பவுன்சர்’ உடன் சச்சின் ஜாலி விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது வீட்டில் வளர்த்து வரும் பவுன்சர் (Bouncer) என்ற செல்ல நாயுடன் மழையில் நனைந்தபடி மகிழ்ச்சியாக விளையாடும் சுவாரசியமான வீடியோ இணையதளங்களில் வெளியாகி தற்போது மிகவும் வைரலாகப் பரவி வருகிறது. தனது வீட்டின் தோட்டத்தில் ஒரு குழந்தையைப் போல சச்சின் டெண்டுல்கர் இந்த விளையாட்டில் ஈடுபட்டது ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

மும்பையில் உள்ள தனது வீட்டுத் தோட்டப் பகுதியில் சச்சின் டெண்டுல்கர் மழையில் நனைந்தபடி தனது செல்ல நாய் ‘பவுன்சர்’ உடன் ஜாலியாக ஓடிப் பிடித்து விளையாடினார். ஒரு சிறு குழந்தையைப் போல மாறிக் காணப்பட்ட சச்சின், பவுன்சருடன் விளையாடியதோடு மட்டுமன்றி, அதற்கு ஆசையுடன் மாம்பழம் ஊட்டிவிட்டு மகிழ்ந்தார். மேலும், இந்த அழகான தருணங்களை வீடியோவாகப் பதிவு செய்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனைப் பகிர்ந்த அவர், தனது நாய்க்கு எல்லையற்ற ஆற்றல் (Energy) இருந்தாலும், அதற்கு பந்துவீச்சின் முக்கிய நுணுக்கமான ‘லைன் அண்ட் லெந்த்’ (Line and length) சரியாகத் தெரியவில்லை என்று கிரிக்கெட் மொழியிலேயே நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!