AR ரஹ்மானிடம் கேட்ட பிறகே கருப்பு படத்தில் இசையமைப்பாளராக இணைந்ததாக சாய் அபயங்கர் கூறியுள்ளார். இதுபற்றி பேசிய அவர், சூர்யாவும், RJ பாலாஜியும் இப்படத்தில் நான் பணியாற்ற வேண்டும் என விரும்பினர். எனவே அவர்களது நம்பிக்கையை காப்பாற்றும் அளவுக்கு பணியாற்றியுள்ளதாக தெரிவித்தார். இப்படத்தில் ரஹ்மான் விலகி, சாய் இசையமைப்பாளராக இணைந்ததால் அவரது ரசிகர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
