திருச்சி அரியமங்கலம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த காட்டூர் பர்மா காலனி பகுதியை சேர்ந்த அந்தோணி அர்னால்டு (வயது 18), திருவெறும்பூர் துவாக்குடி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராம்குமார் ( 20) ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 100 போதை மாத்திரைகள் ரூ. 200 பணம், ஒரு வாட்டர் பாட்டில், ஊசிகள் மற்றும் ஒரு செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யட்டது.
கண்டைனர் லாரி மோதி முதியவர் உயிரிழப்பு
போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை
திருச்சி மாவட்டம் லால்குடி தச்சன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 60). இவர் சென்னை- திருச்சி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மார்பிள்ஸ் கடை எதிரே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி அவர் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரின் தலையில் லாரி ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
