Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விற்பனை வரியை குறைக்க வேண்டும்… இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: வளைகுடா போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி மத்திய எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை, வணிக எரிவாயு சிலிண்டர் விலையையும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளையும் உயர்த்தி உள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை போக்கும் வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு மாற்றம் வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாக வைத்து செயல்படுகிறதென்று சொல்கிறார்கள். பெட்ரோலுக்கும், டீசலுக்கும், எரிவாயு சிலிண்டருக்கும் உள்ள விற்பனை வரியை குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

error: Content is protected !!