Skip to content

திருச்சியில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் ….. அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு..

  • by Authour

தமிழர் திருநாளான தை பொங்கலை வரவேற்கும் விதமாக திருச்சியில் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி சாஸ்திரி சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது.

இந்த பொங்கல் விழாவில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே. என்.நேரு கலந்து கொண்டு பொதுமக்கள்

மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினார். இந்த பொங்கல் விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், ஜெண்டை மேளம், தாரை தப்பட்டை என மேல தாளங்களுடன் கோலாகலமாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இந்த சமத்துவ பொங்கல் கொண்டாட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!