நடிகர் விஜய் வசிக்கும் நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்கக் கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அவரது மனைவி சங்கீதா புதிய மனு அளித்துள்ளார். விவாகரத்து வழக்கு முடியும் வரை நீலாங்கரை இல்லத்தில் தங்க அனுமதிக்க வேண்டும். நடிகர் விஜயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் மன உளைச்சலால் நீதிமன்றத்தை நாடினேன். திருமணத்திற்குப்பின் நீண்டகாலமாக வாழ்ந்த நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும்.
நீலாங்கரை வீட்டிற்குள் தன்னை அனுமதிக்கக் கோரினால் மிரட்டுகின்றனர் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.
