பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் தங்களை நேரில் அழைத்து பேச வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னையில் தூய்மை பணியாளர்கள் பேரணி நடத்தினர். குறளகத்திலிருந்து தலைமை செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற தூய்மை பணியாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இச்சம்பவம் காரணமாக தலைமை செயலக சுற்றியுள்ள பகுதிகளில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
