Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கஞ்சா விற்ற வாலிபர் கைது… பல லட்சம் மோசடி- திருச்சி க்ரைம்

கஞ்சா விற்ற வாலிபர் கைது... பல லட்சம் மோசடி- திருச்சி க்ரைம்

கஞ்சா விற்ற வாலிபர் கைது

திருச்சி பிராட்டியயூர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக நேற்று எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த புங்கனூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 கிராம் கஞ்சா முதல் செய்யப்பட்டது.
திருச்சியில்

புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது

திருச்சி கே.கே. நகர் உடையான்பட்டி பகுதியில் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கே.கே. நகர் போலீசார் தகவல் வந்தது‌. அந்த தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது கொட்டப்பட்டு இந்திரா நகர் சேர்ந்த சிவச்சந்திரன் (வயது 46) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் மூட்டையில் புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சிவ சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் திருச்சி குழுமாயிக் கரை பூங்கா அருகே புகையிலைப் பொருட்கள் விற்றதாக தென்னூர் பகுதியை சேர்ந்த முகமது ஜாவித் (வயது 27) என்பவரை திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து மொத்தம் 363 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சியில் ஏல சீட்டில்

பணத்தை திருப்பி கட்டாமல் பெண் .பல லட்சம் மோசடி

திருச்சி பொன்மலை பொன்னேரிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் அமல் இவரது மனைவி ஜெயந்தி (வயது 43) இவர் வீட்டில் ஏல சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரது ஏலச் சீட்டில் ஆனிப்பப்பியோலா என்ற பெண் ரூபாய் 6 லட்சம் மற்றும் இரண்டு லட்சம் மதிப்புள்ள 5 சீட்டுகளில் சேர்ந்துள்ளார். இதற்காக அவர் 9 மாதங்களாக ரூ. 9 லட்சத்து 90 ஆயிரத்தை கட்டி , ரூபாய் 7,40,600 பெற்றுள்ளார். பின்னர் மற்றொருவரின் ஏலச்சீட்டு பணமான ரூபாய் 5 லட்சத்து 70 ஆயிரத்தையும், ஜெயந்தி இடமிருந்து கடனாக ரூபாய் 10 லட்சத்து 75 ஆயிரத்தையும் பெற்றுள்ளார். இதையடுத்து அந்தப் பெண் பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட ஜெயந்தி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். கமிஷனர் உத்தரவின் பெயரில் பொன்மலை போலீஸ் சார் ஆனிப்பப்பியோலா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!