மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவின் தலைநகர் கொனகெரியில் உள்ள டார் எஸ் சலாம் பகுதியில், கனமழை காரணமாக குப்பை மேட்டில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. நேற்று (ஆக.13) அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில், குப்பை மலையின் அடியில் இருந்த குடிசைகள் புதைந்து அவற்றில் உறங்கி கொண்டிருந்த 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 6 பேரை மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
