கரூரில் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம் – பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு 300-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் CITU சார்பில் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் அனைத்து பிரிவு ஒப்பந்த தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தரப் பணிகளில் தனியார்மயத்தை அரசாணைகள் 10, 139, 152 ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்திற்கு மாற்றாக தினமும் ரூ.100 உணவுப்படி வழங்க வேண்டும், 8 மணி நேர வேலை, வார விடுப்பு, பண்டிகை கால விடுப்பு உள்ளிட்ட அடிப்படை தொழிலாளர் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
