Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உச்சநீதிமன்ற 51வது தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா …… ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய்.சந்திரசூட் நேற்று ஓய்வு பெற்றார். இதற்கிடையில், மிக மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னாவை அடுத்த தலைமை  நீதிபதியாக நியமிக்க அவர் ஏற்கனவே சிபாரிசு செய்திருந்தார். அதை ஏற்று, புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை கடந்த மாதம் 24-ந் தேதி மத்திய அரசு நியமித்தது.

 இந்த நிலையில் நாட்டின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று (திங்கட்கிழமை) பதவியேற்றார்.. ஜனாதிபதி மாளிகையில் நடநடந்த  நிகழ்ச்சியில் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அடுத்த ஆண்டு (2025) மே 13-ந் தேதி வரை சஞ்சீவ் கன்னா பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்ளிட்ட அமைச்சர்கள்  பங்கேற்றனர்.

கடந்த 1960-ம் ஆண்டு டில்லியில் பிறந்தவர், நீதிபதி சஞ்சீவ் கன்னா. 1983-ம் ஆண்டு டில்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட சஞ்சீவ் கண்ணா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். 2004-ம் ஆண்டு டில்லி அரசின் வழக்கறிஞராகவும் (சிவில்) நியமிக்கப்பட்டார். டில்லி ஐகோர்ட்டின் கூடுதல்நீதிபதியாக கடந்த 2005ம் ஆண்டு சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டார். இவர், கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு ஐகோர்ட்களில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!