Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணாசாலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் உள்ள மூலவருக்கு சித்திரை மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால்,தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய்,

இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப் பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக சுவாமிக்கு பட்டாளை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தில் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்திய சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூரம் ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

error: Content is protected !!