இன்டக்கிராஸ் சொல்யூஷன்ஸ் பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் கிருஷ்ணன் பவுண்டேஷன் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை திருச்சி விமானநிலையம் அருகேயுள்ள திருச்சி பிரஸ் கார்டனில் நடைபெற்றது.
நிறுவனத்தின் இணை இயக்குநர் சதீஷ், மனிதவள மேம்பாட்டுப் பிரிவின் நிர்வாகி அஸ்வின் குமார் தலைமையில் நிறுவனத்தின் பணியாளர்கள் பங்கேற்று சுற்றுச்சூழலுக்கு உகந்த நாட்டு

ஆலம், அரசு, அத்தி, புங்கன், வேம்பு, குதிரைப் பிடுக்கன் உள்ளிட்ட வகைகளைச் சேர்ந்த 100 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி பிரஸ் கார்டன் குடியிருப்போர் நலக் குழுவின் நிர்வாகிகள்,

உரிமையாளர்கள், கட்டுமான மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
