ஈரான்-சவுதி அரேபியா நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் சூழ்நிலை காரணமாக, சவுதி அரேபியாவிற்கான விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இதன்படி, ரியாத், ஜெட்டா, தம்மாம் மற்றும் மதீனா ஆகிய நகரங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து இண்டிகோ விமானங்களும் வரும் அக்.17-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் சவுதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருந்த ஏராளமான பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சவுதி அரேபிய விமானங்கள் ரத்து: இண்டிகோ நிறுவனம் அவசர அறிவிப்பு
